/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
15 சவரன் நகை கொள்ளை போலீஸ் விசாரணை
/
15 சவரன் நகை கொள்ளை போலீஸ் விசாரணை
ADDED : நவ 10, 2024 06:13 AM
ராமநத்தம் : ஆவட்டி அருகே வீட்டிலிருந்த 15 சவரன் நகைகள் கொள்ளை போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆவட்டி அடுத்த கல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தையன், 65; விவசாயி. இவர், கல்குவாரி சாலையில் சிமென்ட் மற்றும் தகர ஷீட்டில் வீடுகள் அமைத்து, குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு சித்தையன் வீட்டின் முன்பும், அவரது மனைவி ஆராயி மற்றும் மகள் உண்ணாமலை ஆகியோர் வீட்டிற்குள்ளும் துாங்கினர்.நேற்று அதிகாலை 5:00 மணிக்கு எழுந்து பார்த்த போது, வீட்டின் கதவு திறந்து கிடந்தது. வீட்டினுள் பிளாஸ்டிக் டப்பாவில் வைத்திருந்த 15 சவரன் நகைகள் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில், ராமநத்தம் போலீசார் வழக்குப் பதிந்து, நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.