/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வடலுாரில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம்; விழா ஏற்பாடுகள் தீவிரம்
/
வடலுாரில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம்; விழா ஏற்பாடுகள் தீவிரம்
வடலுாரில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம்; விழா ஏற்பாடுகள் தீவிரம்
வடலுாரில் 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம்; விழா ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஜன 31, 2025 09:02 AM

கடலுார்; வடலுார் சத்திய ஞான சபையில், 154வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன விழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எனக்கூறிய ராமலிங்க அடிகள் என்றழைக்கப்பட்ட வள்ளலார், 1867ம் ஆண்டு கடலுார் மாவட்டம், வடலுாரில் சத்திய ஞான சபையை நிறுவினார். அருகிலுள்ள சத்திய தருமசாலையில் வள்ளலார் ஏற்றிய அணையா தீபமும், எழுதியருளிய அருட்பெருஞ்ஜோதி அகவலும், எளியவர் பசி போக்கும் அணையா அடுப்பும் உள்ளது.
வள்ளலார் பிறந்த மருதுார் இல்லம், தண்ணீரால் விளக்கு எரித்த கருங்குழி இல்லாம், சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் இல்லம் முக்கிய பகுதிகளாக உள்ளது.
வள்ளலார் சத்திய ஞான சபையில் மாதம்தோறும் பூச நட்சத்திரத்தன்று, ஆறு திரைகளை நீக்கியும், தை மாதத்தில் ஏழு திரைகளை நீக்கி ஜோதி தரிசன பெருவிழா நடைபெற்று வருகிறது.
அதன்படி, வரும் பிப்.11ம் தேதி 154ம் ஆண்டு ஜோதி தரிசன பெருவிழா நடக்கிறது.
இதை முன்னிட்டு சத்திய ஞான சபையில் வண்ணம் பூசும் பணிகள், மின்விளக்குகள் அமைத்தல், பக்தர்கள் தங்குவதற்கான பகுதியில் மேற்கூரை அமைத்தல், பெருவெளி வளாகத்தை சுத்தம் செய்தல் பணிகளை அறநிலையத்துறை மற்றும் வடலுார் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆனாலும், பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகளுக்காக தோண்டப்பட்ட குழிகள், தடுப்புகள் அமைத்து மறைக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கில் திரளும் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு இது இடையூறாக இருக்கும்.
ஜோதி தரிசனத்திற்கு உலகெங்கிலும் இருந்து 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பதால் ஒவ்வொரு ஆண்டும் கடும் நெரிசல் ஏற்படுகிறது. தற்போது பெருவெளியில் சர்வதேச மையத்திற்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் தடுப்புகள் அமைத்து மறைத்துள்ளதால், கூடுதல் நெருக்கடி ஏற்படும் என்பதால், பக்தர்கள் வந்து செல்ல கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்திடவேண்டும்.