ADDED : ஏப் 13, 2026 11:27 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் தொகுதியில் 85 வயதுக்கு மேற்பட்டோர் உட்பட 164 தபால் ஓட்டுகள் முதல் நாளிலேயே செலுத்தப்பட்டது.
விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் தே.மு.தி.க., பா.ம.க., நாம் தமிழர், த.வா.க., த.வெ.க., உட்பட 18 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், அரசு அலுவலர்கள் மற்றும் போக்குவரத்துத் துறையினர் தபால் ஓட்டுகள் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நேற்று முதல், வரும் 15ம் தேதி வரை மூன்று நாட்கள் தபால் ஓட்டு பெறப்படுகிறது.
நேற்று காலை முதல் தபால் ஓட்டுகள் பெறும் பணி துவங்கியது. 85 வயதுக்கு மேற்பட்டோர் பிரவில் 196 பேரில் 62 பேரும், மாற்றுத்திறனாளிகள் 186 பேரில் 65 பேரும், அத்தியாவசிய பணியில் ஈடுபடுவோர் பிரிவில் 82 பேரில் 37 பேரும் தபால் ஓட்டுகளை செலுத்தினர். விருத்தாசலம் தொகுதியில் மொத்தம் உள்ள 464 பேரில், நேற்று மட்டும் 164 பேர் தபால் ஓட்டுகளை பதிவு செய்தனர்.
