/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
17 வயது சிறுமி கர்ப்பம்: 7 பேர் மீது வழக்கு பதிவு
/
17 வயது சிறுமி கர்ப்பம்: 7 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜன 08, 2025 08:34 AM
கடலுார்: சிறுமிக்கு திருமணம் செய்து வைத்தது தொடர்பாக 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடலுார் அரசு மருத்துவமனைக்கு 17 வயது சிறுமி நேற்று மருத்துவ பரிசோதனைக்காக வந்தார்.
டாக்டர்கள் அவரை பரிசோதித்ததில், 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்து டாக்டர்கள், கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து விசாரணை நடத்தியதில், பிளஸ் 2 படித்துள்ள சிறுமியை கடலுார், கே.என்.பேட்டையை சேர்ந்த முருகவேல் மகன் சந்தோஷிற்கு, சிறுமியின் பெற்றோர் திருமணம் செய்து வைத்தது தெரியவந்தது.
இதையடுத்து கோவில் பூசாரியாக உள்ள சந்தோஷ் மற்றும் அவரது பெற்றோர், சிறுமியின் பெற்றோர் உட்பட திருமணத்திற்கு உடந்தையாக இருந்த 7 பேர் மீது போலீசார் 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.