/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாடா ஏஸ் கவிழ்ந்து விபத்து 18 பெண்கள் படுகாயம்
/
டாடா ஏஸ் கவிழ்ந்து விபத்து 18 பெண்கள் படுகாயம்
ADDED : மார் 05, 2024 06:23 AM
திட்டக்குடி: திட்டக்குடி அடுத்த நிதிநத்தம் அருகே டாடாஏஸ் கவிழ்ந்ததில் 18பேர் படுகாயமடைந்தனர்.
திட்டக்குடி அடுத்த கழுதுார் தனியார் கல்லுாரியில் விதவைப் பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சி முடிந்து இரவு 8.30மணியளவில் பெண்ணாடத்தைச் சேர்ந்த ஆயிஷாபீவி,57; ஜரினா,40; நஸ்ரத்பேகம்,43; ஷகிலாபானு,19; கொளஞ்சி,47; தி.அகரத்தை சேர்ந்த கல்பனா,46; இளவரசி,32; உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் டாடா ஏஸில் பெண்ணாடம் நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஏ.அகரம் வளைவில் வந்த போது, டாடா ஏஸ் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் டாடா ஏஸில் பயணம் செய்த 18 பெண்கள் காயமடைந்து, ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக வேப்பூர் மற்றும் திட்டக்குடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து திட்டக்குடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

