ADDED : ஜூன் 14, 2026 09:36 AM
அ நிறம் | அளவு
வடலுார்: மூதாட்டியை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
வடலுார், பார்வதிபுரத்தை சேர்ந்தவர் கந்தசாமி மனைவி கலைச்செல்வி, 71; வீட்டின் அருகே பொது பாதை தொடர்பாக அவரது உறவினர் பிரகாஷ் தரப்புக்கும், மூதாட்டி தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் நேற்று முன்தினம் பிரகாஷ் மற்றும், அவரது தரப்பை சேர்ந்த துரைபழனிவேல் ஆகியோர் மூதாட்டி கலைச்செல்வியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் வடலுார் போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்தனர்.
