ADDED : மார் 19, 2026 04:27 AM

அ நிறம் | அளவு
வடலுார்: வடலுாரில் ஹான்ஸ் பாக்கெட்டுகளை பஸ்சில் கடத்தி வந்த, 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடலுார் பஸ் நிலையத்தில், போலீஸ் எஸ்.ஐ., சேகர் மற்றும் போலீசார், சோத னையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்றிருந்த இருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள், முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அந்த நபர்களின் பைகளை சோதனை செய்தனர். அதில், 36 கிலோ ஹான்ஸ் மற்றும், குட்கா பொருட்கள் கடத்தி செல்லப்பட்டது தெரிய வந்தது.
ஹான்ஸ் கடத்திய வடலுார் அடுத்த தென்குத்து, ஆட்டுக்கால் (எ) பிரகாஷ், 35 ; மருங்கூர், குமார் (எ) குமாரசாமி, 32 ;ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப் பதிந்த போலீசார், அவர்களுக்கு ஹான்ஸ், குட்கா விற்பனை செய்தோ ர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
