ADDED : நவ 21, 2025 07:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேத்தியாத்தோப்பு: சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே ரம்ஜான் தைக்கால் கிராமத்தை சேர்ந்த கருணாகரன் மகன் கார்த்தி, 20; பேரூராட்சி தற்காலிக குப்பை வண்டி டிரைவர். இவர், தனது நண்பர் குருமூர்த்தி, 21; என்பவர் மூலம், 14 வயது சிறுமியை வரவழைத்து, பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியன் பெற்றோர் அளித்த புகாரில், சேத்தியாத்தோப்பு மகளிர் போலீசார், கார்த்திக் மீது போக்சோ மற்றும் உடந்தையாக இருந்த குருமூர்த்தி மீது வழக்குப்பதிந்து, இருவரையும் கைது செய்தனர்.

