ADDED : மார் 06, 2026 03:32 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுாரில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், புதுநகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். மஞ்சக்குப்பம் கருமாரப்பேட்டை விநாயகர் கோவில் அருகில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த அதே பகுதியைச் சேர்ந்த வினு,41; என்பவரை போலீசா ர் கைது செய்தனர்.
இதே போன்று, புதுப்பாளையத்தில் லாட்டரி சீட்டு விற்ற புதுவண்டிப்பாளையத்தை சேர்ந்த கணேசன், 41; என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இருவரிடம் இருந்து லாட்டரி விற்ற பணம் ரூ. 900 மற்றும் லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
