/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கஞ்சா வழக்கில் 2 பேர் கைது பெண்ணாடம் போலீஸ் அதிரடி
/
கஞ்சா வழக்கில் 2 பேர் கைது பெண்ணாடம் போலீஸ் அதிரடி
கஞ்சா வழக்கில் 2 பேர் கைது பெண்ணாடம் போலீஸ் அதிரடி
கஞ்சா வழக்கில் 2 பேர் கைது பெண்ணாடம் போலீஸ் அதிரடி
ADDED : நவ 25, 2024 06:20 AM

பெண்ணாடம் ; கஞ்சா விற்ற வழக்கில் போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்த சிறுவன் உட்பட இருவரை பெண்ணாடம் போலீசார் கைது செய்தனர்.
பெண்ணாடம் போலீஸ் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில், கடந்த ஆக., 26ம் தேதி கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் குணபாலன், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் அய்யப்பன் கோவில் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
சோழன் நகர் 4வது தெருவைச் சேர்ந்த வீரமணி மகன் விஜய், 19, பாண்டியன் மகன் அலெக்ஸ், ஆகியோர் கஞ்சா விற்க நின்றிருந்தனர். போலீசாரை கண்ட அவர்கள் தப்ப முயன்றபோது விஜய் சிக்கினார். விஜயிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அலெக்ஸ் தலைமறைவானார்.
இதேபோன்று, கடந்த செப்., 20ம் தேதி திருமலை அகரத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த சதீஷ்குமார், அப்துல் ஆசிப் மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோரை பிடிக்க முயன்றபோது, சதீஷ்குமார், அப்துல் ஆசிப் ஆகியோர் சிக்கினர். சிறுவன் தப்பிச்சென்றான்.
இதுகுறித்து, பெண்ணாடம் போலீசார் தனித்தனியே வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த அலெக்ஸ், 23, மற்றும் சிறுவனை தேடி வந்தனர்.
பல மாதங்களாக போலீசாருக்கு 'டிமிக்கி' கொடுத்த அலெக்ஸ், சிறுவன் இருவரும் திருச்சியில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து சென்று தலைமறைவாக இருந்த இருவரையும் நேற்று கைது செய்தனர்.