/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகை கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது
/
நகை கொள்ளை வழக்கில் மேலும் 2 பேர் கைது
ADDED : ஆக 14, 2025 12:57 AM

பண்ருட்டி : பண்ருட்டி அருகே அரசு டாக்டர் வீட்டில் 97 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுபிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் ராஜா. இவர், விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிகிறார். கடந்த மாதம் 25ம் தேதி இவரது வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்ம நபர்கள், 97 சவரன் நகைகளை கொள்ளைடியத்துச் சென்றனர்.
புகாரின் பேரில், காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து வேலுார் மாவட்டம், தெள்ளுர் சுரேஷ்குமார், 37; அசோக்குமார்,35; தினேஷ்குமார், 23; உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய மேட்டூர் மூர்த்தி,35; வல்லரசு, 26; ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 20 சவரன் நகைளை பறிமுதல் செய்தனர்.