ADDED : ஜன 30, 2026 05:28 AM
பண்ருட்டி: மலட்டாற்றில் டிராக்டரில் மணல் கடத்திய இருவரை போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி அடுத்த வரிஞ்சிப்பாக்கம் மலட்டாற்று பகுதியில் இரவு நேரங்களில் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் பண்ருட்டி டி.எஸ்.பி ராஜா தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 1:40 மணிக்கு வரிஞ்சிப்பாக்கம் மலட்டாறு பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்றில் இருந்து மணல் கடத்திச் சென்ற டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் வரிஞ்சிப்பாக்கத்தை சேர்ந்த நடராஜன் மகன் சசிக்குமார், 39; முருகன் மகன் பரமகுமரன்,30; ஆகிய இருவரையும் பிடித்து, புதுப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.
அதன் பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து, சசிகுமார்,39; பரமகுமரன்,30; இருவரை கைது செய்தனர்.
