ADDED : டிச 08, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் பகுதியில் குட்கா பொருட்கள் விற்ற, பெட்டிக்கடை உரிமையாளர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் இளங்கோவன், செல்வராஜ் தலைமையிலான போலீசார் விருத்தாசலம், கார்குடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேலம் ரோடு, விருத்தாம்பிகை நகரைச் சேர்ந்த மணிகண்டன், 45; கார்குடல் கிராமத்தை சேர்ந்த பிரகாஷ், 34, ஆகியோர் தங்களது பெட்டிக்கடையில், தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 32 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.