/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நெய்வேலியில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பு
/
நெய்வேலியில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பு
நெய்வேலியில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பு
நெய்வேலியில் 2 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைப்பு
ADDED : மார் 17, 2024 05:33 AM

நெய்வேலி: நெய்வேலி பகுதியில் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட இரு ரவுடிகள் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.
நெய்வேலி அடுத்துள்ள வடக்கு மேலுார், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அறிவரதன் மகன் நீலகண்டன். 26. இவர் மீது ஒரு கொலை மற்றும் 3 கொலை முயற்சி வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகள் நெய்வேலி போலீசில் உள்ளது. அதுபோல்   வடக்கு மேலுார், வடக்கு தெருவை சேர்ந்த வீரப்பன் மகன் சந்துரு, 20;  என்பவர் மீது, அடிதடி மற்றும் கொலை முயற்சி உட்பட 13 வழக்குகள் உள்ளது.  இருவரும் டவுன்ஷிப் போலீசாரால் கைது செய்யப்பட்டு கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இருவரின் தொடர் குற்ற செயல்களை தடுத்திடும் வகையில் கடலுார் எஸ்.பி., ராஜாராம் பரிந்துரையின்பேரில் கலெக்டர் அருண் தம்புராஜ் இருவரையும் குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். அதன்பேரில், சிறையில் உள்ள இருவரிடமும் உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

