ADDED : மார் 10, 2026 03:48 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கூழாங்கற்கள் கடத்தி வந்த டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் இன்ஸ்பெக்டர் பிரதாப் சந்திரன் தலைமையிலான போலீசார், ஆலடி முடக்கு சாலையில் நேற்று அதிகாலை ரோந்து சென்றனர். அப்போது, அவ்வழியே வந்த டி.என்.48. ஏ.பி.1155 மற்றும் டி.என்.51. பி.1522 பதிவெண் கொண்ட டிப்பர் லாரிகளை மடக்கினர். அப்போது, டிரைவர்கள் தப்பியோடிய நிலையில், லாரியில் தலா 3 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரிந்தது.
கள்ளத்தனமாக கூழாங்கற்கள் கடத்தி வந்த டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், அதன் உரிமையாளர்கள், ஓட்டுனர்களை தேடி வருகின்றனர்.
