/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தனியார் தொழிற்சாலையில் சுவர் இடிந்து 2 பெண்கள் பலி
/
தனியார் தொழிற்சாலையில் சுவர் இடிந்து 2 பெண்கள் பலி
தனியார் தொழிற்சாலையில் சுவர் இடிந்து 2 பெண்கள் பலி
தனியார் தொழிற்சாலையில் சுவர் இடிந்து 2 பெண்கள் பலி
ADDED : ஆக 24, 2025 12:37 AM

கடலுார்:கடலுார் சிப்காட் தனியார் தொழிற்சாலையில், சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, இரு பெண்கள் உயிரிழந்தனர்.
கடலுார் மாவட்டம், காரைக்காட்டில், 'இன்டியன் பாஸ்பேட்' ரசாயன தொழிற்சாலையின் ஒரு பகுதியில், கட்டுமான பணி நடக்கிறது.
நேற்று மாலை, 6:00 மணிக்கு பணி முடிந்து, தொழிலாளர்கள் பொருட்களை வைப்பதற்காக கட்டுமான பகுதிக்கு சென்றனர். அப்போது, மூன்று நாட்களுக்கு முன் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து, தொழிலாளர்கள் மீது விழுந்தது.
இதில், ஆலப்பாக்கம், கம்பளிமேட்டை சேர்ந்த இளமதி, 35, இந்திரா, 32, ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கினர். அவர்களின் அலறல் கேட்டு, அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டனர்.
இளமதி சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த இந்திரா, கடலுார் அரசு மருத்துவமனையில் இறந்தார். முதுநகர் போலீசார் விசாரிக்கின்றனர். எஸ்.பி., ஜெயக்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.