ADDED : ஆக 27, 2026 07:02 PM
அ நிறம் | அளவு
காட்டுமன்னார்கோவில், ஆக. 28–
வாய்த்தகராறில் இளைஞர்களை தாக்கிய இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அடுத்த இளங்கமூர் கிராமத்தை சேர்ந்த மோகன் மகன் ஆகாஷ்,21; இவர் இளங்கமூர் பஸ் நிறுத்தம் அருகே தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது பைக்கில் வந்த வாண்டையார் இருப்பைச் சேர்ந்த நாகேஷ் மகன் கார்த்தி,22; இளங்கோவன் மகன் சஞ்சய்குமார்,19; ஆகியோர் ஓரமாக நின்று பேசக்கூடாதா எனக் கேட்டனர்.
அதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். அவர்களை அங்கிருந்தவர்கள் இரு தரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து ஆகாஷ் கொடுத்த புகாரின் பேரில் குமராட்சி போலீசார் வழக்கு பதிந்து வாண்டையார்இருப்பைச் சேர்ந்த கார்த்திகேயன், சஞ்சய்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
