UPDATED : செப் 22, 2026 10:44 PM
ADDED : செப் 22, 2026 10:14 PM
நெல்லிக்குப்பம்:கல்லுாரி மாணவர் உள்ளிட்ட இரு இளைஞர்கள் மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லிக்குப்பம் அடுத்த பி.என்.பாளையத்தை சேர்ந்த ராமு மகன் சபரிகிரி,20; கடலூர் அரசு கல்லூரியில் பி.ஏ., 2ம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் விஷ்வா,20: ஐ.டி.ஐ., முடித்துவிட்டு வேலை தேடி கொண்டுள்ளார்.
இருவரும் நேற்று முன்தினம் ஆலப்பாக்கம் அடுத்த பெத்தான்குப்பத்தில் உள்ள நண்பர் வீட்டில் நடந்த பிறந்தநாள் விழாவிற்கு பைக்கில் சென்றவர்கள் வீடு திரும்பவில்லை.
சந்தேகமடைந்த அவரது பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் தேடி வருகின்றனர்.
காணமல் போனவர்கள் பற்றிய தகவல் கிடைத்தால் நெல்லிக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டரை 94981 06389, சப் இன்ஸ்பெக்டரை 94981 52016 எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
லும் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.
