/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
20 கிலோ கஞ்சா பறிமுதல் சிதம்பரத்தில் 4 பேர் கைது
/
20 கிலோ கஞ்சா பறிமுதல் சிதம்பரத்தில் 4 பேர் கைது
ADDED : நவ 27, 2024 07:42 AM

சிதம்பரம்: சிதம்பரத்தில், 20 கிலோ கஞ்சாவுடன் சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனர்.
சிதம்பரம், அண்ணாமலை நகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கர் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் மாரியப்பா நகரில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்திற்கிடமான நின்றிருந்த, ஆந்திரா பதிவண் கொண்ட காரை மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது காரில் இருந்து தப்பிக்க முயன்ற சில இளைஞர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
அவர்கள் சிதம்பரம் தில்லைநாயகபுரம் சிவா மகன் தமிழரசன், சிதம்பரம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்த முருகன் மகன் முத்துகிருஷ்ணன், 24; அய்யப்பன் மகன் வினோத், 21; ஆந்திரா மாநிலம் நெல்லுார் பகுதியை சேர்ந்த உதயபாஸ்கர், 60; என்பதும், ஆந்திரா மாநிலம், நெல்லூரில் இருந்து 20 கிலோ கஞ்சாவை, விற்பனைக்காக காரில் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. அதனையடுத்து, வழக்கு பதிந்து 4 பேரையும் கைது செய்து, காரை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ. 5 லட்சம்.
கைது செய்யப்பட்ட ஆந்திராவை சேர்ந்த உதய்பாஸ்கர் மீது, செம்மரக்கட்டை கடத்தல் வழக்குகள் உள்ளன. தப்பியோடிய பிரபல ரவுடி சிவராஜன், சிவா, விமல்ராஜ், ரஞ்சித்குமார் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.
20 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசாரை எஸ்.பி., ராஜாராம் பாராட்டினார்.