/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஸ்டாலின் பிறந்த நாள் விழா 20 ஆயிரம் லட்டுகள் வழங்கல்
/
ஸ்டாலின் பிறந்த நாள் விழா 20 ஆயிரம் லட்டுகள் வழங்கல்
ஸ்டாலின் பிறந்த நாள் விழா 20 ஆயிரம் லட்டுகள் வழங்கல்
ஸ்டாலின் பிறந்த நாள் விழா 20 ஆயிரம் லட்டுகள் வழங்கல்
ADDED : மார் 02, 2024 06:08 AM

நெய்வேலி : நெய்வேலியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, தொ.மு.ச., சார்பில், தொழிலார்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 20 ஆயிரம் லட்டுகள் வழங்கப்பட்டது.
என்.எல்.சி., - தொ.மு.ச., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
நெய்வேலி, டவுன்ஷிப் வட்டம் 25ல் உள்ள தொ.மு.ச., அலுவலகத்தில் கட்சி கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.
தொ.மு.ச., பொதுச்செயலாளர் பாரி, தலைவர் திருமாவளவன், பொருளாளர் அய்யப்பன், அலுவலக செயலாளர் ஜெரால்டு, நிலக்கரி சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள், தொழிலக பகுதிகளின் துணை தலைவர்கள், பகுதி செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், என்.எல்.சி.,யின் அனைத்து பகுதிகளிலும் பணியாற்றும் தொழிலாளர்கள், அதிகாரிகளுக்கு 20 ஆயிரம் லட்டுகளை வழங்கி, கொண்டாடினர்.