/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஊரக திறனாய்வு தேர்வு:2,272 மாணவர்கள் பங்கேற்பு
/
ஊரக திறனாய்வு தேர்வு:2,272 மாணவர்கள் பங்கேற்பு
ADDED : டிச 08, 2025 05:56 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் நடந்த 'ஊரக திறனாய்வு' தேர்வில், 2,272 மாணவர்கள் பங்கேற்று தேர்வு எழுதினர்.
தமிழகத்தில் உள்ள கிராமப்புற மாணவர்களின் திறமையை அடையாளம் காணவும், அவர்களுக்கு நிதியுதவி அளிக்கவும் தமிழக அரசால் 'ஊரக திறனாய்வு தேர்வு' நடத்தப்படுகிறது.
கிராமப்புற பள்ளிகளில் படிக்கும், 9ம் வகுப்பு மாணவர்கள் இந்த தேர்வினை எழுதலாம். இதில், தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000; என பிளஸ் 2 படிக்கும் வரை அவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
இந்நிலையில், இந்த தேர்வு, விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி, விருத்தாசலம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலை பள்ளிகளில், வேப்பூர் அரசு உயர்நிலை பள்ளி, சேத்தியாதோப்பு டி.ஜி.எம்., மேல்நிலைப் பள்ளி, புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய, 8 மையங்களில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற பள்ளிகளை சேர்ந்த, 2,337 பேர் விண்ணப்பித்த நிலையில், 2,272 மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இந்த தேர்வு மையங்களை டி.இ.ஓ., துரைப்பாண்டியன் ஆய்வு செய்தார்.

