/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் 23 பேர் கைது
/
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் 23 பேர் கைது
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் 23 பேர் கைது
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் சிதம்பரத்தில் 23 பேர் கைது
ADDED : நவ 09, 2024 06:10 AM
சிதம்பரம், : சிதம்பரத்தில், அமரன் படம் வெளியான திரையரங்கம் முன், எஸ்.டி.பி.ஐ., கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிதம்பரம் லேனா திரையரங்கில் அமரன் படம் வெளியாகியுள்ளது. இப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி நேற்று எஸ்.டி.பி.ஐ., கட்சியினர், திரையரங்கம் முன்பு, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நகரத் தலைவர் அப்துல்கபூர் தலைமை தாங்கினார்.
படத்தில், சிறுபான்மை முஸ்லிம்கள் மீது வெறுப்பை விதைத்து மத நல்லிணக்கை தடுக்கும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதை கண்டித்து, கோஷம் எழுப்பப்பட்டது. இதனால் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை போலீசார் கைது செய்தனர்.