/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விஷ வண்டு கொட்டியதில் விருதையில் 25 பேர் காயம்
/
விஷ வண்டு கொட்டியதில் விருதையில் 25 பேர் காயம்
ADDED : மார் 30, 2025 08:28 AM
விருத்தாசலம் : பள்ளி ஆண்டு விழாவில் கதண்டுகள் கொட்டியதில் 25 மாணவர்கள் காயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், கம்மாபுரம் அடுத்த வி.சாத்தப்பாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், நேற்று முன்தினம் மாலை ஆண்டு விழா நடந்தது. விழாவில், மாணவர்களின் பெற்றோர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இரவு 7:00 மணிக்கு பள்ளி வளாகத்தில் உள்ள அரச மரத்தில் கட்டியிருந்த கதண்டு கூண்டில் மர்ம நபர்கள் கல்வீசினர். அதில், கூண்டில் இருந்த கதண்டுகள் பறந்து வந்து பள்ளி வளாகத்தில் இருந்த மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை கொட்டியது. அதில் 25 பேர் காயமடைந்தனர்.
உடன் அவர்களை கம்பாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.
வி.சாத்தப்பாடி கருணாநிதி மனைவி ப்ரியா, 29; மகள்கள் தியாஸ்ரீ, 10; ருபிக் க்ஷா, 8; கிருஷ்ணிதா, 6; இரண்டரை வயது மகதீஷ் உள்ளிட்டோர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து கம்மாபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.