/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
2,500 கிலோ ரேஷன் அரிசி விருதையில் பறிமுதல்
/
2,500 கிலோ ரேஷன் அரிசி விருதையில் பறிமுதல்
ADDED : ஏப் 28, 2025 05:48 AM

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் வேனில் 50 மூட்டை ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம்-பரங்கிப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில், டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் நேற்று பகல் 12:00 மணிக்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த டிஎன் 20 -டி.ஈ3973 பதிவெண் கொண்ட மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், 50 சாக்கு மூட்டைகளில் தலா 50 கிலோ எடை வீதம் 2,500 கிலோ ரேஷன் அரிசி கடத்தி வந்தது தெரிந்தது.
விசாரணையில், கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த டிரைவர் அஸ்லாம், 35; என்பவர், கிராமங்களில் ரேஷன் அரிசியை விலைக்கு வாங்கி, கோழி தீவனத்திற்காக கடத்தி வந்தது தெரிந்தது. இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து அஸ்லாமை கைது செய்து, ரேஷன் அரிசி மூட்டைகளுடன் வேனை பறிமுதல் செய்தனர்.