/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
27ல் அஞ்சல் சேவை குறை தீர்ப்பு கூட்டம்.
/
27ல் அஞ்சல் சேவை குறை தீர்ப்பு கூட்டம்.
ADDED : செப் 24, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: கடலுார் கடற்கரை சாலை, வண்ணாரப்பாளையம் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில், வரும் 27ம் தேதி காலை 11:30 மணியளவில், அஞ்சல் சேவை மக்கள் குறை தீர்ப்பு மன்ற கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில், கடலுார் அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலக சேவைகளில் வாடிக்கையாளர்களின் பிரச்னைகள், புகார்கள் மற்றும் குறைகள் விவாதிக்கப்பட்டு தீர்வு காணப்படும். இம்மன்றத்தின் விவாதத்திற்கான புகார்கள் மற்றும் குறைகள் இருப்பின் அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர், கடலுார் கோட்டம், கடலுார் 607 001 என்ற முகவரிக்கு வரும் 26ம் தேதிக்கு முன்பாக அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.