தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இருதரப்பு மோதல் 3 பேர் கைது

 இருதரப்பு மோதல் 3 பேர் கைது

 இருதரப்பு மோதல் 3 பேர் கைது


ADDED : பிப் 04, 2026 06:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2026 06:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுார் அடுத்த கிழக்கு ராமாபுரத்தைச் சேர்ந்தவர் அசோக் மகன் நித்தீஷ்,18, கல்லுாரி மாணவர். இவர் நேற்று முன்தினம் தனது தம்பி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன், கிழக்கு ராமாபுரம் பைபாஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த பிள்ளையார்மேடு பகுதியைச் சேர்ந்த பசுபலிங்கம் மகன் பலராமன்,25, மற்றும் அவரது தரப்பைச் சேர்ந்தவர்கள் முன்விரோதம் காரணமாக நித்திஷ் தரப்பினருடன் தகராறில் ஈடுபட்டனர்.

இதில் இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். திருப்பாதிரிப்புலியூர் போலீசார், இருதரப்பு புகார்களின் பேரில் 13 பேர் மீது வழக்குப்பதிந்து பலராமன், நந்தகோபால்,25, மற்றும் வசந்தராஜா ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us