ADDED : ஆக 19, 2026 04:50 AM
அ நிறம் | அளவு
நடுவீரப்பட்டு: ஓவர் லோடு ஏற்றிய 3 டிப்பர் லாரிகளை போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தனர்.
கடலுார் ஆர்.டி.ஓ.,சுந்தர்ராஜன் நடுவீரப்பட்டு - எஸ்.புதுக்குப்பம் சாலையில் வாகன தணிக்கை மேற்கொண்டார். அப்போது, அவ்வழியே கிராவல் ஏற்றி வந்த 3 டிப்பர் லாரிகளை நிறுத்த முயன்றனர்.
உடன், மூன்று டிரைவர்களும், லாரிகளை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டனர். லாரிகளை, சோதனை செய்ததில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக கிராவலை ஏற்றிச் செல்வது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து மூன்று டிப்பர் லாரிகளையும் பறிமுதல் செய்து, நடுவீரப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து சிலம்பிநாதன்பேட்டை வி.ஏ.ஓ., சிவலிங்கம் அளித்த புகாரின்பேரில், அழகப்பாசமுத்திரத்தில் உள்ள குவாரி உரிமையாளர் பாவாடை மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
