ADDED : செப் 22, 2024 03:36 AM

சேத்தியாத்தோப்பு:கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த மதுராந்தகநல்லுார் கிராமத்தில் டாடா ஏஸ் வாகனத்தில் 4 பேர் பாக்டம்பாஸ் உரத்தை மலிவு விலையில் விற்பனை செய்தனர்.
சந்தேகமடைந்த அப்பகுதியை சேர்ந்த விவசாயி சிவநேசன், கொடுத்ஹ்ட தகவலின்பேரில், கீரப்பாளையம் வட்டார வேளாண் அலுவலர் சிவப்பிரியன், மதுராந்தகநல்லுாருக்கு நேரில் சென்று, உரத்தை தண்ணீரில் கரைத்து ஆய்வு செய்தபோது மண் என, தெரிய வந்தது.
சேத்தியாத்தோப்பு டி.எஸ்.பி., சிறப்பு பிரிவு சப் இன்ஸ்பெக்டர் செல்வபாண்டியன், 24, மூட்டை உரத்துடன் டாடா ஏஸ் வாகனத்தையும், அதில் வந்த நான்கு பேரில் மூவரை பிடித்து ஒரத்துார் போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில், தஞ்சாவூர் கீழ ரத வீதி கந்தபிரபு, 39, விருத்தாலம் அடுத்த பெரியகண்டியங்குப்பம் பச்சமுத்து, 38, வயலுார் விஜயரங்கன், 34, நறுமணம் மகேஷ் ஆகியோர் போலி உரத்தை தயாரித்து பாக்டம் பாஸ் கம்பெனி சாக்கு மூட்டையில் பேக் செய்து மூட்டைகளை ஏற்றி வந்து விவசாயிகளை ஏமாற்றி விற்றது தெரிய வந்தது.
கந்தபிரபு, விஜயரங்கன், பச்சமுத்து, ஆகிய மூவரை கைது செய்து 24 போலி உரமூட்டைகளை பறிமுதல் செய்தனர். மேலும், தப்பியோடிய மகேைஷ தேடி வருகின்றனர்.