/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
செம்மண் கடத்திய 3 பேர் கைது ஆர்.டி.ஓ., அதிரடி நடவடிக்கை
/
செம்மண் கடத்திய 3 பேர் கைது ஆர்.டி.ஓ., அதிரடி நடவடிக்கை
செம்மண் கடத்திய 3 பேர் கைது ஆர்.டி.ஓ., அதிரடி நடவடிக்கை
செம்மண் கடத்திய 3 பேர் கைது ஆர்.டி.ஓ., அதிரடி நடவடிக்கை
ADDED : ஜன 25, 2025 02:38 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அருகே செம்மண் கடத்திய 2 டிப்பர் லாரிகள்,  ஜே.சி.பி., ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
நடுவீரப்பட்டு பகுதியில் இயங்கும் செம்மண் குவாரிகளில் சரியான அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் கடலுார் ஆர்.டி.ஓ., அபிநயா தலைமையில் வருவாய்த்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் கீழ்அருங்குணம் குவாரிக்கு வழங்கப்பட்ட அனுமதி சீட்டு, பதிவு எண் இல்லாத வரிசீட்டை வைத்துக்கொண்டு விலங்கல்பட்டு குவாரியில் செம்மண் ஏற்றிய 2 டிப்பர் லாரிகள், பதிவு எண் இல்லாத ஹிட்டாச்சி ஜே.சி.பி., ஆகிய வாகனங்களை பறிமுதல் செய்து நடுவீரப்பட்டு போலீசில் ஒப்டைத்தனர்.
இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசில் திருவந்திபுரம் ஆர்.ஐ., பிரியதர்ஷினி கொடுத்த புகாரில், செம்மண் கடத்தியதாக வில்லியநல்லுார் பாலமுருகன், சாத்தமாம்பட்டு மோகனசுந்தரம், கீழ்அருங்குணம் குவாரி உரிமையாளர் பரிசமங்லம் ராஜேந்திரன், திருமாணிக்குழி செல்வநாதன், விலங்கல்பட்டு குவாரி உரிமையாளர் கண்ணாரப்பேட்டை ராஜாராம், கண்காணிப்பாளர் தமிழ்செல்வன் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிந்து பாலமுருகன்,50; மோகனசுந்தரம்,40, தமிழ்செல்வன், 34; ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

