/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போலீசுக்கு மிரட்டல் விடுத்த சிறுவன் உட்பட 3 பேர் கைது
/
போலீசுக்கு மிரட்டல் விடுத்த சிறுவன் உட்பட 3 பேர் கைது
போலீசுக்கு மிரட்டல் விடுத்த சிறுவன் உட்பட 3 பேர் கைது
போலீசுக்கு மிரட்டல் விடுத்த சிறுவன் உட்பட 3 பேர் கைது
ADDED : மார் 29, 2025 06:44 AM
கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பத்தில் ரம்ஜான் நோன்பு சிறப்பு தொழுகை நேற்று முன்தினம் இரவு நடந்தது.
இதையொட்டி பெரிய பள்ளிவாசல் வழியாக வாகனங்கள் செல்ல போலீசார் தடை விதித்து மாற்று வழியில் அனுப்பி வைத்தனர்.
அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த கோட்டக்குப்பம் ஜமியத் நகரைச் சேர்ந்த பசுருல்லாகான் மகன்கள் இனையத்துல்லாகான்,19; சல்மான்கான்,18; மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை, அங்கு பணியில் இருந்த சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர்.
ஆத்திரமடைந்த மூவரும் சிறப்பு சப் இன்ஸ்பெக்டரை தாக்க முயற்சித்து, ஆபாசமாக திட்டி, மிரட்டல் விடுத்தனர்.
இதுகுறித்து சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ், அளித்த புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து இணையத்துல்லா கான், சல்மான்கான் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.