/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது
/
வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேர் கைது
ADDED : நவ 16, 2024 02:33 AM
சிதம்பரம்: சிதம்பரம் புறவழிச்சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அடுத்த திருநாரையூர் கிழக்கு தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன், 48; இவர் நேற்று முன்தினம் புவனகிரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று, பைக்கில் வீடு திரும்பினார்.
சிதம்பரம் - புவனகிரி புறவழிச்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அவரை பின்தொடர்ந்து, பைக்கில் சென்ற 3 பேர், ஜானகிராமனை வழிமறித்து, கையில் வைத்திருந்த மொபைல் போன், ரூ. 1,200 ஆகியவற்றை, பறித்துக்கொண்டு, அவரை கீழே தள்ளி விட்டு தப்பிச்சென்றனர்.
இது குறித்து, ஜானகிராமன், சிதம்பரம் தாலுகா போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதில் சிதம்பரம் விபீஷ்ணபுரம் ராஜகணபதி நகரை சேர்ந்த மோகன் மகன் பாலா,22; சின்ன கடை தெருவை சேர்ந்த ஞானசம்பந்த மகன் மோனிஷ்ராஜ், 23; மற்றும் 15 வயது சிறுவன் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
போலீசார் வழிப்பறியில் ஈடுபட்ட பாலா, மோனிஷ்ராஜ் மற்றும் சிறுவன் மூவரையும் கைது செய்தனர். இதில் சிறுவனை கடலுார் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பிவைத்தனர்.