ADDED : டிச 04, 2024 06:15 AM

கடலுார்: கடலுாரில் தற்கொலைக்கு முயன்ற வாலிபர் மற்றும் அவரைக்காப்பாற்ற முயன்ற இருவர் உட்பட ஆற்றில் சிக்கியவர்களை, தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.
கடலுார், கம்மியம்பேட்டையைச் சேர்ந்தவர் முத்துராகவன் மகன் பிரகாஷ்ராஜ், 22. இவரது அக்காவின் மூன்றரை வயது குழந்தை, இரண்டு தினங்களுக்கு முன் இறந்துவிட்டார்.
இதனால் மனமுடைந்த பிரகாஷ்ராஜ், நேற்று மாலை 3.30 மணியளவில் கெடிலம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை காப்பாற்ற முத்து, கார்த்தி ஆகிய இரண்டு பேர் கெடிலம் ஆற்றில் குதித்தனர். மூன்று பேரும் ஆற்றில் இருந்த பாழடைந்த கிணற்றில் தஞ்சமடைந்தனர். தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலவர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள் மற்றும் போலீஸ் படகு டீம், மூன்று பேரையும் பத்திரமாக மீட்டனர். பிரகாஷ்ராஜ் சிகிச்சைக்காக கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.