தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வழிப்பறி முயற்சி 3 பேர் கைது

வழிப்பறி முயற்சி 3 பேர் கைது

வழிப்பறி முயற்சி 3 பேர் கைது


UPDATED : அக் 05, 2026 12:00 AM

ADDED : அக் 04, 2026 05:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 05, 2026 12:00 AM ADDED : அக் 04, 2026 05:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் காரில் சென்றவரிடம் கத்தியை காட்டி வழிப்பறி செய்ய முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் அடுத்த அழகியநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் மகன் பலராமன், 25; இவர், நேற்று முன்தினம் விழுப்புரம்–நாகப்பட்டிணம் பைபாஸ் வழியாக காரில் சிதம்பரம் சென்று கொண்டிருந்தார். வழிசோதனைப்பாளையம் அருகில் வந்த போது, இயற்கை உபாதை கழிக்க கீழே இறங்கினார்.

அப்போது, அடையாளம் தெரியாத 3 பேர் திடீரென கத்தியை காட்டி மிரட்டி பலராமனிடம் பணம் பறிக்க முயன்றனர். உடன், அவர், கூச்சலிடவே 3 பேரும் தப்பினர். இதுகுறித்து பலராமன் கடலுார் முதுநகர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் மர்ம நபர்களை தேடி வந்தனர். தொண்டமாநத்தம் அருகில் பதுங்கியிருந்த 3 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

அவர்கள், கடலுார், முதுநகர் பிரசாந்த்,31; குப்புசாமி மகன் ரவி,27; குறிஞ்சி்ப்பாடி, மேல புதுப்பேட்டை ரவிச்சந்திரன் மகன் சிவராஜ்,26; என்பதும், பலராமனிடம் பணம் பறிக்க முயன்றதும் தெரிந்தது. உடன், போலீசார் வழக்குப் பதிந்து பிரசாந்த் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து, கத்தியை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us