/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாஸ்மாக் சரக்கு விற்ற 3 பேர் கைது
/
டாஸ்மாக் சரக்கு விற்ற 3 பேர் கைது
ADDED : அக் 02, 2024 11:48 PM
காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அருகே, காந்தி ஜெயந்தியான நேற்று டாஸ்மாக் மதுபாட்டில்களை கள்ளத்தனமாக விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் போலீசார் நேற்று தொரப்பு கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்கு, அதே பகுதியை சேர்ந்த தேவேந்திரன், 47; என்பவர், காந்தி ஜெயந்தி முன்னிட்டு, டாஸ்மாக் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், 22 குவாட்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோன்று, காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள லால்பேட்டை கொல்லிமலை கீழ்பாதி கிராமத்தில் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 31 குவாட்டர் பாட்டிலை பறிமுதல் செய்த போலீசார், சாவடி தெருவை சேர்ந்த முகமது, 24, மற்றும் மேட்டுத் தெருவை சேர்ந்த புகழேந்தி, 24; இருவரையும் கைது செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் போலீசார் மூவர் மீது வழக்கு பதிவு செய்தனர்.