ADDED : டிச 04, 2024 10:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி; புவனகிரியில் வயல் பகுதியில் மின் ஒயர் அறுந்து விழுந்ததில் அப்பகுதியில் மேய்ந்த மூன்று ஆடுகள் உடல் கருதி இறந்தது.
புவனகிரி பெருமாத்துார் எம்.ஜி.ஆர்., நகரைச் சேர்ந்த கலா, சத்தியஸ்வரி மற்றும் மல்லிகா ஆகிய மூவருக்கும் சொந்தமான ஆடுகள் அப்பகுதியில் உள்ள வயல் பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தது.
அப்போது வயல் பகுதியில் திடீரென அறுந்து விழுந்த மின் ஒயரில் சிக்கி மூன்று ஆடுகளும் உடல் கருகி இறந்தது.
தகவலறிந்த புவனகிரி மின் துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மின்மாற்றியை நிறுத்தி, ஒயர்களை சரி செய்தனர்.
இதனால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. வருவாய்த்துறையினர் விசாரித்து வருகின்றனர்.