/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஓடும் பஸ்சில் 52 சவரன் நகை பறிப்பு மர்ம நபர்களை பிடிக்க 3 தனிப்படை அமைப்பு

ADDED : நவ 30, 2024 05:05 AM
விருத்தாசலம்: ஓடும் பஸ்சில் நகை கடை ஊழியரிடம் இருந்து 52 சவரன் நகைகளை பறித்து சென்ற மர்ம நபர்களை மூன்று தனிப்படை போலீசார் தேடிவருகின்றனர்.
விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சியை சேர்ந்தவர் ஜான்பால், 45; விருத்தாசலத்தில் உள்ள நகை கடையில் வேலை செய்து வரும் இவர், நேற்று முன்தினம் மாலை 52 சவரன் நகைகளுக்கு பெண்ணாடத்தில் உள்ள ஹால்மார்க் சென்டரில், ஹால்மார்க் சீல் போட்டுக் கொண்டு, விருத்தாசலத்திற்கு அரசு பஸ்சில் புறப்பட்டார்.
பஸ் கருவேப்பிலங்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் நின்றபோது, ஜான்பால் வைத்திருந்த நகைப்பையை மர்ம நபர் பறித்துக் கொண்டு பஸ்சில் இருந்து தப்பியோடி, பின் தொடர்ந்து வந்த பைக்கில் தப்பிச் சென்றார்.
இதுகுறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடிவருகின்றனர். இவர்களை பிடிக்க எஸ்.பி., ராஜாராம் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர்கள் முருகேசன், குணபாலன், சப் இன்ஸ்பெக்டர்கள் சந்துரு, பாக்யராஜ், சங்கர் அடங்கி மூன்று தனிப்படை போலீசார், சி.சி.டி.வி., பதிவு மொபைல் போன் டவர் சிக்னல் உள்ளிட்ட அழைப்புகளின் பேரில் மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.