/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பள்ளியில் காரை விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்
/
பள்ளியில் காரை விழுந்து 3 மாணவர்கள் படுகாயம்
ADDED : நவ 02, 2025 02:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம்: தனியார் பள்ளியில் காரை பெயர்ந்து விழுந்து, மூன்று மாணவர்கள் காயமடைந்தனர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம் எருமனுார் சாலையில் தனியார் மெட்ரிக் பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று மூன்றாம் வகுப்பு அறையில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த போது, சிமென்ட் காரை திடீரென பெயர்ந்து விழுந்தது.
இதில், மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர். ஒரு மாணவனுக்கு தலையில், 6 தையல் போடப்பட்டுள்ளது. மற்ற இரு மாணவர்களும் லேசான காயங்களுடன் தப்பினர். விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

