ADDED : மார் 10, 2026 03:49 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நேற்று நடந்த பிளஸ் 2 தேர்வில், 300 மாணவர்கள் பங்கேற்காமல் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த 2ம் தேதி பிளஸ் 2 தேர்வுகள் துவங்கி நடக்கிறது. கடலுார் மாவட்டத்தில், கடந்த மார்ச் 2ம் தேதி நடந்த மொழித்தேர்வில் பள்ளி மாணவர்கள் 196 பேர், தனித்தேர்வர்கள் 46 பேர் என 242 பேர் தேர்வில் பங்கேற்காமல் ஆப்சென்ட் ஆகினர். அதேபோல் நேற்று வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வு நடந்தது. பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் என 30ஆயிரத்து 83 மாணவர்கள் தேர்வெழுத ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் மொத்தமாக 300 மாணவர்கள் ஆப்சென்ட் ஆன நிலையில் 29ஆயிரத்து 783 மாணவர்கள் மட்டுமே தேர்வெழுதினர்.
