/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வெள்ளத்தில் அடித்துச்சென்ற 32 எருமைகள்
/
வெள்ளத்தில் அடித்துச்சென்ற 32 எருமைகள்
ADDED : டிச 04, 2024 10:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்; கடலுார் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடலுார் நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரால் சூழப்பட்டது. இந்நிலையில் நேற்று கடலுார் தேவனாம்பட்டினம் முகத்துவாரத்தை கடக்க கெடிலம் ஆற்றின் வெள்ளத்தில் இறங்கிய 32 எருமைகள், கடலுக்குள் அடித்துச்செல்லப்பட்டது. எருமைகள் அடித்துச் செல்லப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடலுார் முதுநகர் பகுதியைச் சேர்ந்த மாட்டின் உரிமையாளர்கள், அடித்துச்செல்லப்பட்டது தங்களின் மாடுகள் என போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக, வருவாய்துறையினர் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.