ADDED : ஜூலை 03, 2026 03:56 AM
அ நிறம் | அளவு
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் 33 தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
கடலுார் மாவட்டத்தில் 33 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கடலுார் ஆதி திராவிடர் நலத்துறை தாசில்தார் மகேஷ், முத்திரை தாள் (தனி) தாசில்தாராகவும், பண்ருட்டி சமூக பாதுகாப்பு திட்டத்தின் தாசில்தார் அமர்நாத், கடலுார் குடிமைப் பொருள் தாசில்தாராகவும், குறிஞ்சிப்பாடி தாசில்தார் விஜய் ஆனந்த், கடலுார் துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், கடலுார் கலால் உதவி ஆணையர் அலுவலக மேலாளர் சதீஷ்குமார், சிதம்பரம் தாசில்தாராக மாவட்டம் முழுவதும் 33 பேர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
