புத்தாண்டு பாதுகாப்பு பணி: மாவட்டத்தில் 330 வழக்குகள் பதிவு
புத்தாண்டு பாதுகாப்பு பணி: மாவட்டத்தில் 330 வழக்குகள் பதிவு
ADDED : ஜன 02, 2026 04:14 AM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அசம்பாவிதங்களை தடுப்பதற்காக போலீசார் மேற்கொண்ட தீவிர கண்காணிப்பில் 330 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
கடலுார் மாவட்டத்தில், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க மாவட்ட எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின் பேரில், ஏ.டி.எஸ்.பி.,க்கள் கோடீஸ்வரன், ரகுபதி மற்றும் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சாலை விபத்து மரணங்கள் மற்றும் விபத்துக்களை தடுக்கும் பொருட்கள் போலீசார் மேற்கொண்ட வாகன சோதனையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது உட்பட போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடட் 330 பேர் மீது மோட்டார் வாகன சட்டப்பட்டி வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
மேலும் புதுச்சேரி மாநிலத்திலிருந்து மது கடத்தலை தடுப்பதற்காக, மாவட்ட எல்லையில் உள்ள மதுவிலக்கு சோதனைச் சாவடிகளில் போலீசார் மேற்கொண்ட தீவிர சோதனையில் எட்டு மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
கடலுார் மாவட்ட பொதுமக்கள் அமைதியான முறையில் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தனர்.
