/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பறக்கும் படை வாகனங்களில் 360 டிகிரி சுழல் கேமரா கலெக்டர் அருண் தம்புராஜ் தகவல்
/
பறக்கும் படை வாகனங்களில் 360 டிகிரி சுழல் கேமரா கலெக்டர் அருண் தம்புராஜ் தகவல்
பறக்கும் படை வாகனங்களில் 360 டிகிரி சுழல் கேமரா கலெக்டர் அருண் தம்புராஜ் தகவல்
பறக்கும் படை வாகனங்களில் 360 டிகிரி சுழல் கேமரா கலெக்டர் அருண் தம்புராஜ் தகவல்
ADDED : மார் 17, 2024 05:36 AM

கடலுார்: கடலுார் மாவட்ட தேர்தல் பறக்கும்படை வாகனங்களில் முதல் முறையாக சுழுலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் தம்புராஜ் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியது:
லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் கடலுார் மாவட்டத்தில் அமலானது. கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதில், தேர்தல் தொடர்பான புகார்களை கட்டணமில்லா தொலை பேசி எண் 1800 425 3168 மற்றும் 1950, கட்டுப்பாட்டு அறை 04142 220277 ஆகியவற்றில் தெரிவிக்கலாம்.
மாவட்டத்தில், 2302 ஓட்டுச்சாவடி மையங்கள் உள்ளன. இதில் 11 மிகவும் பதற்றமானவை, 187 பதற்றமானவை.
கலெக்டர் அலுவலகத்தில் 27 பொறுப்பு அலுவலர்கள், 27 பறக்கும் படைகள், 27 நிலை கண்காணிப்பு குழு, 9 வீடியோ கண்காணிப்பு குழு அமைத்து, 24 மணி நேரமும் பணியில் ஈடுபட்டுள்ளனர். பறக்கும் படை வாகனங்களில் 360 டிகிரி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தேர்தல் பணியில் 19 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுகின்றனர்.
மாவட்டத்தில், 21 லட்சத்து 36 ஆயிரத்து 48 வாக்காளர்கள் உள்ளனர். 4945 பேலட் யூனிட், 2911 கன்ட்ரோல் யூனிட், 3406 வி.வி.பேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.
அரசு கட்டடங்கள், தனியார் கட்டடங்கள் சுவர்களில் அரசியல் விளம்பரங்கள் செய்யக் கூடாது. கிராம ஊராட்சிகளில் அனுமதி பெற்று விளம்பரம் செய்ய அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
எஸ்.பி., ராஜாராம், டி.ஆர்.ஓ., ராஜசேகரன் உடனிருந்தனர்.

