sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கடலூர்

/

கஞ்சா விற்ற 4 பேர் கைது: நெய்வேலியில் போலீஸ் அதிரடி

/

கஞ்சா விற்ற 4 பேர் கைது: நெய்வேலியில் போலீஸ் அதிரடி

கஞ்சா விற்ற 4 பேர் கைது: நெய்வேலியில் போலீஸ் அதிரடி

கஞ்சா விற்ற 4 பேர் கைது: நெய்வேலியில் போலீஸ் அதிரடி


ADDED : மார் 18, 2024 03:58 AM

Google News

ADDED : மார் 18, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெய்வேலி : நெய்வேலியில் கஞ்சா விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

நெய்வேலி, தெர்மல் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் தவச்செல்வன், சந்தோஷ்குமார் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர்.

நெய்வேலி வட்டம் - 29ல் உள்ள சிறுவர் விளையாட்டு பூங்காவில் உட்கார்ந்திருந்த 4 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோடினர்.

அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்தனர். அவர்கள், நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் - 21ஐ சேர்ந்த சக்ரவர்த்தி மகன் சுதாகர், 26; சீனிவாசன் மகன் சிவா, 20; வட்டம் - 29ஐ சேர்ந்த மோசஸ் சம்பத் மகன் பிரதீப்மோகன், 29; பாபு மகன் சிவா, 20, என்பதும், அவர்கள் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து, அவர்கள் நால்வரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 1 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us