/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் 21 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது
/
கடலுாரில் 21 கிலோ கஞ்சா கடத்திய 4 பேர் கைது
ADDED : நவ 25, 2025 05:43 AM

கடலுார்: கடலுார் முதுநகர் அருகே கஞ்சா மற்றும் போதை மாத்திரையுடன் பதுங்கியிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மதுவிலக்கு அமல்பிரிவு ஏ.டி.எஸ்.பி., சார்லஸ் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப் இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் போலீசார் முதுநகர் சுத்துக்குளம் ரயில்வே கிராசிங் அருகில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு பதுங்கியிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், சென்னை, மேடவாக்கம் ராகவன் மகன் ராகுல்,23; பெரும்பாக்கம் சிவானந்தம் மகன் சிவக்குமார்,24; சென்னை கந்தன்சாவடி சிவா மகன் வேலன்,22; சிதம்பரம் கங்காதரன் மகன் தீபக்,25; எனத் தெரிந்தது. இவர்கள் வைத்திருந்த பேக்கை சோதனை செய்ததில், 21 கிலோ கஞ்சா, 130 போதை மாத்திரைகள், 3 மொபைல் போன்கள் இருந்தது.
இவர்கள், கடந்த 15ம் தேதி வல்லம்படுகை நவீன், கவிபாரதி, சிதம்பரத்தைச் சேர்ந்த சந்துரு, ஸ்ரீராம், தீபக் ஆகியோர் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வருமாறு கூறி சிவக்குமாரிடம் பணம் கொடுத்தனர்.
அன்றையே தினமே சிவக்குமார், ராகுல், வேலன் ஆகிய 3 பேரும் ஆந்திராவில் இருந்து 30 கிலோ கஞ்சா வாங்கி வந்துள்ளனர். 21ம் தேதி ஸ்ரீராம், சந்துரு இருவரும் 5 கிலோ கிலோ சிதம்பரம் பகுதியில் விற்பனை செய்ய கடத்தி வரும்போது கடலுார் ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் போலீசாரால் கைது செய்யப்பட்டதும் தெரிந்தது.
4 கிலோ கஞ்சாவை சென்னையில் விற்பனை செய்தனர். 21 கிலோ கஞ்சாவை சிதம்பரம் பகுதியில் விற்பனை செய்ய ரயில் மூலம் கடலுார் முதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்ததும் தெரிந்தது.
இவ்வழக்கில் தொடர்புடைய வல்லம்படுகை நவீன், நேற்று முன்தினம் அண்ணாமலைநகர் இன்ஸ்பெக்டர் அம்பேத்கரால் சுட்டு பிடிக்கப்பட்டார என்பது குறிப்பிடத்தக்கது.

