/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
258 கிலோ குட்கா கடத்தல் பண்ருட்டியில் 4 பேர் கைது
/
258 கிலோ குட்கா கடத்தல் பண்ருட்டியில் 4 பேர் கைது
ADDED : ஏப் 21, 2025 06:46 AM

பண்ருட்டி : பெங்களூருவில் இருந்து 258 கிலோ குட்கா கடத்தி வந்த 4 பேரை, பண்ருட்டியில் போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி டி.எஸ்.பி., ராஜா தலைமையில் இன்ஸ்பெக்டர் அசோகன், சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல், பிரேம்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் நேற்று காலை பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, நெல்லிக்குப்பம் நோக்கி வந்த ஜி.ஜே.27-டி.பி.0023 பதிவெண் கொண்ட கியா கார், பி.ஒய்02 கியூ-0532 பதிவெண் கொண்ட மாருதி காரை சந்தேகத்தின் பேரில் காரை நிறுத்தி சோதனை நடத்தினர்.
அதில், 23 முட்டைகளில் 258 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரிந்தது. இவற்றின் மதிப்பு 3 லட்சம் ரூபாய் ஆகும்.
விசாரணையில், நெல்லிக்குப்பம், சுல்தான்பேட்டை தெரு அப்துல்ரஷீத், 46; ராஜஸ்தான் மாநிலம் ஜாலுார் மாவட்டத்தை சேர்ந்த கண்ணாராம் மகன் ரமேஷ், 24; கேசராம் மகன் ஹரிஷ், 26; ராஜாராம் மகன் சங்கர்லால், 27; ஆகியோர் பெங்களூருவில் இருந்து விற்பனைக்காக கடத்தி வந்தது தெரிந்தது.
பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்து, குட்கா மற்றும் இரு கார்களை பறிமுதல் செய்தனர்.
எஸ்.பி., ஜெயக்குமார் பிடிபட்ட குட்கா பொருட்களை பார்வையிட்டு போலீசாரை பாராட்டினார்.