ADDED : செப் 11, 2026 10:55 PM
பண்ருட்டி,செப்.12–
முன்விரோதம் காரணமாக இருவரை தாக்கிய 4 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் பிரதாப்,19; பி.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வருகிறது.
இவரது தம்பியும், பண்ருட்டி செட்டிப்பட்டறையை சேர்ந்த சுபாஷ் சித்தப்பா மகனுக்கும் இடையே கடலுாரில் நடந்த விளையாட்டு போட்டிக்கு சென்ற போது தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் சுபாஷ், பிரதாப்பை, தொடர்பு கொண்டு, அங்குசெட்டிப்பாளையம் உயர்நிலைப்பள்ளி அருகே வருமாறு கூறினார். அதன்பேரில், அங்கு பிரதாப் அங்குசென்ற போது சுபாஷ் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து, உன் தம்பி பள்ளிக்கூடத்தில் தகராறு செய்வான். அவனுக்கு நீ சப்போட்டா என ஆபாசமாக திட்டி தாக்கினர். தடுக்க முயன்ற பண்ருட்டி விழமங்கலத்தை சேர்ந்தவ இன்பன் மகன் தணிகைராஜியையும் தாக்கினர். அதில் ் பிரதாப், தணிகைராஜ் இருவரும் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் புதுப்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, சுபாஷ் உள்ளிட்ட 4 பேரை தேடிவருகின்றனர்.
