தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/பெண்ணை தாக்கிய 4 பேர் கைது

பெண்ணை தாக்கிய 4 பேர் கைது

பெண்ணை தாக்கிய 4 பேர் கைது


UPDATED : அக் 15, 2026 04:42 PM

ADDED : அக் 15, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 15, 2026 04:42 PM ADDED : அக் 15, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சத்திரம்: இளம் பெண்ணை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பரங்கிப்பேட்டை அடுத்த அரியகோஷ்டியை சேர்ந்தவர் உத்திராபதி மனைவி ஷர்மிளா,30; இவர் தனது தம்பி அஜித் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க, தனது கணவர் உத்திராபதி, தங்கை ரூபிணி உறவினர்கள் விக்னேஷ், வளர்மதி, ரேவதி, மணிவண்ணன் ஆகியோருடன், கடலூர் சென்று ஜவுளி எடுத்துவிட்டு, புதுச்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே இறங்கி, டீ குடித்தனர்.

அப்போது அங்கு வந்த வில்லியநல்லூரைச் சேர்ந்த கணேசன் மகன் கனகராஜ், கணேசமூர்த்தி மகன் ராமராஜ், குப்பன் மகன் மணிகண்டன், சக்திவேல் மகன் சத்தியசீலன் ஆகியோர் ரூபினியின் உடையை பிடித்து இழுத்து தகராறு செய்தனர். தட்டிக்கேட்ட ஷர்மிளா, ரூபினி, உத்திராபதியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து ஷர்மிளா கொடுத்த புகாரின்பேரில், புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிந்து கனகராஜ்,32; ராமராஜ்,30; மணிகண்டன்,33; சத்தியசீலன்,38; ஆகியோரை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us