/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேர் கைது
/
டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேர் கைது
டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேர் கைது
டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேர் கைது
ADDED : ஆக 15, 2025 03:31 AM

பண்ருட்டி: பண்ருட்டி அருகே டாக்டர் வீட்டில் 97 சவரன் நகை கொள்ளையடித்த வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பிள்ளையார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. அரசு மருத்துவமனையில் டாக்டராக உள்ளார். இவரது வீட்டின் கதவை உடைத்து, கடந்த மாதம் 24ம் தேதி 97 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
காடாம்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து, கடந்த 3ம் தேதி வேலுார் மாவட்டம், தெல்லுாரை சேர்ந்த சுரேஷ்குமார், 37; அசோக்குமார், 35; சேலம் மேட்டுரை சேர்ந்த தினேஷ்குமார், 23; ஜெகதீசன், 31; தர்மபுரியை சேர்ந்த முருகன், 51; ஆகிய 5பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 94 சவரன் நகை மீட்கப்பட்டது.
நேற்று முன்தினம் மேட்டூர் எஸ்.பி.,குடியிருப்பை சேர்ந்த மூர்த்தி,35; மாதயன் குட்டை தெரு வல்லரசு,26; ஆகியோர் கைதாகினார். அவர்களிடம் இருந்து 20 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் கொள்ளை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த பண்ருட்டி, புதுப்பிள்ளையார்குப்பத்தை சேர்ந்த கோவிந்தராஜ், 44; அவரது நண்பர் நடுவீரப்பட்டு சி.என்.பா ளையத்தை சேர்ந்த சேகர், 42; ஆண்டி மடம் மேலத்தெருவை சேர்ந்த அன்பழகன், 52; ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஜோதிபுரம் சென்னம்பட்டி, நொட்டதோட்டம் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்கிற சண்முகசுந்தரம், 68; ஆகிய 4பேரை நேற்று போலீசார் கைது செய்த னர்.