ADDED : நவ 13, 2024 09:11 PM

நெய்வேலி; நெய்வேலி அருகே கீழ் வடக்குத்து சேர்ந்தவர் மதிவதனன். 28; இவரது மொபைல் போன் தொலைந்து விட்டதால், நேற்று முன்தினம் டவுன்ஷிப் போலீசில் புகார் கொடுக்க வந்தார்.
போலீஸ் நிலையம் எதிரே உள்ள வீரமணி,26; என்பவரது வீட்டு முன்பு அமர்ந்து புகார் எழுதினார். அப்போது, மதிவதனனிடம் என் வீட்டருகே உனக்கு என்னடா வேலை என கேட்டு வீரமணி மிரட்டியுள்ளார். இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், நேற்று இந்திரா நகர் பி - 2 மாற்றுக்குடியிருப்பு அருகே பைக்கில் வந்த மதிவதனனை வழிமறித்து, வீரமணி மற்றும் நண்பர்கள் வேல்முருகன் மகன் ஸ்ரீராம். 22; என்.ஜே.வி., நகர் மணி மகன் சூர்யா.22; இந்திரா நகர் ஹரிகிருஷ்ணன் மகன் ஆனந்த். 26; ஆகியோர் தாக்கினர். கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் (பொறுப்பு) வழக்கு பதிந்து வீரமணி உட்பட நான்கு பேரையும் கைது செய்தனர். தப்பியோட முயன்ற ரவுடி வீரமணி கீழே விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு, மாவுக்கட்டு போடப்பட்டது.