/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேர் போக்சோ வழக்கில் கைது
/
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேர் போக்சோ வழக்கில் கைது
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேர் போக்சோ வழக்கில் கைது
சிறுமியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 4 பேர் போக்சோ வழக்கில் கைது
ADDED : ஜன 29, 2024 08:17 AM
திட்டக்குடி : ராமநத்தத்தில் 17வயது சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சிறுமியின் உறவு பெண் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், ராமநத்தம் சர்வீஸ் ரோட்டில் உள்ள தனியார் லாட்ஜில் நேற்று காலை ராமநத்தம் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.அங்கு 17 வயது சிறுமி மற்றும் ஒரு பெண், நான்கு ஆண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டதை கண்டறிந்தனர்.
விசாரணையில் 17வயது சிறுமியை, அவரது உறவினர் பெண் ஈரோட்டிற்கு அழைத்துப்போவதாக கூறி, ராமநத்தத்தில் உள்ள லாட்ஜிற்கு அழைத்து வந்தது தெரியவந்தது.
சிறுமி அளித்த புகாரின் பேரில், ஐந்து பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, பெரம்பலுார் மாவட்டம், நமையூரைச் சேர்ந்த சேகர்,47, செங்குணம் சக்திவேல்,32, அயன்பேரையூர் கார்த்திக்,29, மற்றும் சிறுமியின் உறவுப் பெண் உட்பட நால்வரை கைது செய்தனர்.
தப்பியோடிய வேளாண் அதிகாரி ஜெயபால் என்பவரை தேடி வருகின்றனர்.